யுவராஜ், உத்தப்பா சொத்துக்கள் முடக்கம்! ஆன்லைன் பெட்டிங் வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
December 20, 2025

ஆன்லைன் பெட்டிங் செயலியான 1xBet தொடர்பான பணமோசடி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பாவின் கோடிக்கணக்கான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. யுவராஜின் ₹2.5 கோடி மற்றும் உத்தப்பாவின் ₹8.26 கோடி சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
₹1,000 கோடி மதிப்பிலான இந்த மோசடியில் ஏற்கனவே ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னாவின் சொத்துக்களும் முடக்கப்பட்டன. பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த விசாரணையில் இதுவரை மொத்தம் ₹19.07 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.