மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் இந்தியாவில் விமான சேவைகள் அதிரடியாக குறைப்பு
March 27, 2026

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் இந்திய விமான நிறுவனங்கள் தங்களது கோடைகால அட்டவணையில் வாரத்திற்கு சுமார் 3,000 விமான சேவைகளை குறைக்க முடிவு செய்துள்ளன. கடந்த ஆண்டை விட 12 சதவீத சேவைகள் குறைக்கப்படுவதால், மார்ச் 29 முதல் அக்டோபர் 31 வரை விமான பயணங்களில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் கூடுதல் கட்டணம் மற்றும் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளதால் விமான கட்டணங்கள் உயரக்கூடும் என இண்டிகோ போன்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த இக்கட்டான சூழலில் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது.