மும்பை முதல் டெல்லி வரை மக்களிடையே முதலிடம் பிடித்த பால் ஜெப்டோ ஆர்டரில் புதிய மைல்கல்

மும்பை முதல் டெல்லி வரை மக்களிடையே முதலிடம் பிடித்த பால் ஜெப்டோ ஆர்டரில் புதிய மைல்கல்

குயிக் காமர்ஸ் தளமான ஜெப்டோ தனது 2025 ஆம் ஆண்டிற்கான விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பெங்களூரு, டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் பால் விற்பனை முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூருவில் நந்தினி பாலும், மும்பை மற்றும் டெல்லியில் அமுல் பாலும், ஹைதராபாத்தில் ஹெரிடேஜ் பாலும் கோடிக்கணக்கான யூனிட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. 10 நிமிட டெலிவரி வசதி காரணமாக மக்கள் மளிகைப் பொருட்களை ஆன்லைனில் வாங்குவது பெருமளவு அதிகரித்துள்ளதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

பால் தவிர ஸ்நாக்ஸ் மற்றும் பிற பொருட்களின் தேவையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மும்பையில் எனர்ஜி டிரிங்க்ஸ் மற்றும் டெல்லியில் ஃபேஸ் மாஸ்க்குகள் அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. வினோதமான போக்காக மும்பையில் ஸ்நாக்ஸ் மற்றும் ஆணுுறைகளும், டெல்லியில் ஈனோ மற்றும் சட்னியும் ஒன்றாக அதிகம் வாங்கப்பட்டுள்ளன. ஹைதராபாத் மக்கள் உஸ்மானியா பிஸ்கட்டுகளை விரும்பி வாங்கிய நிலையில், பெங்களூருவில் டைப்-சி சார்ஜிங் கேபிள்கள் அதிக விற்பனையை கண்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *