மருமகனுடன் ஓட்டம் பிடித்த மாமியார்! அலிகார் சம்பவத்தின் நகல் உ.பி. பஸ்தியில்

உத்தரப் பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தில், பெண் ஒருவர் தன் மகளின் மணமகனுடன் வீட்டை விட்டு ஓடிப் போன அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்பு கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், அந்தப் பெண்ணின் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் மணமகன் – மணமகள் பேசிக்கொண்டிருக்க, நாளடைவில் தாயும் இளைஞருடன் பழகத் தொடங்கினார். இந்த அசாதாரண உறவு வெளியே தெரிந்ததும் பெண் வீட்டார் திருமணத்தை ரத்து செய்தனர்.
இருப்பினும், அவர்களுக்கு இடையேயான தொடர்பு தொடர்ந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் மாமியாருடன் திடீரென மாயமானார். உறவினர்கள் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸில் புகார் அளித்தனர். மாயமான இருவரையும் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். அலிகாரில் நடந்ததைப் போலவே இந்தச் சம்பவமும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.