மருத்துவர் இல்லாததால் பறிபோன பிஞ்சு உயிர் திமுக அரசின் அலட்சியத்தை சாடிய நயினார் நாகேந்திரன்

திருச்சி மாவட்டம் கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால், நான்கரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான நிகழ்வு குறித்து பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் கட்டமைப்பு என்று வெறும் விளம்பரம் செய்யும் திமுக அரசு, போதிய மருத்துவர்களை நியமிக்கத் தவறியதையே இது காட்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நிர்வாகத் திறனின்மையால் ஒரு குழந்தையின் ஆயுள் பறிக்கப்பட்டிருப்பது மன்னிக்க முடியாதது என்று அவர் தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் இது போன்ற கொடூர சம்பவங்கள் நடைபெறக் கூடாது என வலியுறுத்தியுள்ள அவர், மக்களின் உயிரோடு விளையாடும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.