மரத்தில் கட்டி வைத்து எரித்துக் கொலை! மைமன்சிங் கொடூர இரவு குறித்து தந்தை உருக்கம்
December 20, 2025

வங்கதேசத்தின் மைமன்சிங்கில் இளைஞர் ஒருவர் மரத்தில் கட்டி வைத்து அடித்துக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரியங்கா காந்தி மற்றும் சசி தரூர் உள்ளிட்ட இந்திய அரசியல் தலைவர்கள் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். யூனுஸ் அரசு இதுவரை 7 பேரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்துப் பேசிய இளைஞரின் தந்தை, மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறித் தன் மகனைத் தூக்கிச் சென்று சித்திரவதை செய்ததாகக் கூறினார். பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி நடுரோட்டில் உடல் எரிக்கப்பட்டது. இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக அரசாங்கத்திடம் இருந்து தங்களுக்கு எந்தவித உறுதிமொழியும் கிடைக்கவில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.