மத்திய பட்ஜெட்டில் தம்பதிகளுக்கு காத்திருக்கும் மெகா சலுகை இனி அதிக வரி மிச்சமாகும்

மத்திய அரசு வரும் 2026 பட்ஜெட்டில் தம்பதிகளுக்கான ‘கூட்டு வரி’ (Joint Taxation) முறையை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்த புதிய திட்டத்தின் கீழ், கணவன் மற்றும் மனைவி இணைந்து வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யலாம். இதன் மூலம், குடும்பத்தில் ஒருவர் மட்டும் சம்பாதிக்கும் பட்சத்தில், மற்றவரின் வரி விலக்கு வரம்பையும் பயன்படுத்தி கணிசமான தொகையை சேமிக்க முடியும். இது நடுத்தர வர்க்க குடும்பங்களின் வரிச் சுமையை வெகுவாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் பழைய வரி முறையை முழுமையாக ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்குப் பதிலாக, புதிய வரி முறையில் சம்பளம் பெறுவோருக்கான நிலையான கழிவு (Standard Deduction) வரம்பை ரூ. 75,000-லிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள இந்த கூட்டு வரி முறை, இந்திய வரி செலுத்துவோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.