மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட், 8வது ஊதியக் குழு அமலாகும் தேதி மற்றும் முக்கிய அப்டேட்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழு, 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் பெரிய மாற்றம் ஏற்படும். குறிப்பாக ஃபிட்மென்ட் ஃபேக்டர் அடிப்படையில் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 18,000-லிருந்து கணிசமாக உயர்ந்து ரூ. 51,480 வரை செல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
அதேசமயம் அகவிலைப்படி (DA) நிறுத்தப்படும் என்ற வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்களைத் தவிர, மற்ற அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் வழக்கமான டிஏ மற்றும் ஓய்வூதிய பலன்கள் தொடர்ந்து கிடைக்கும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பணவீக்கம் மற்றும் நாட்டின் நிதி நிலையை கருத்தில் கொண்டு, ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த இறுதி முடிவை அரசு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.