மத்திய அரசின் பிரகதி மாடல் சாதனை 85 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் மின்னல் வேகத்தில் அமல்

மத்திய அரசின் பிரகதி மாடல் சாதனை 85 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் மின்னல் வேகத்தில் அமல்

பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ‘பிரகதி’ (PRAGATI) தளம், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தி வளர்ச்சிப் பணிகளை வேகப்படுத்தியுள்ளது. இதுவரை நடந்துள்ள 50 கூட்டங்களின் மூலம் ₹85 லட்சம் கோடி மதிப்பிலான 3,300-க்கும் மேற்பட்ட திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் 7,156 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதோடு, மிகவும் சிக்கலான 382 திட்டங்களுக்குப் பிரதமர் நேரடியாகத் தலையிட்டுத் தீர்வுகளை வழங்கியுள்ளதாக அமைச்சரவைச் செயலாளர் டி.வி. சோமநாதன் தெரிவித்துள்ளார்.

திட்டங்களுக்கான கூடுதல் செலவு மற்றும் காலதாமதத்தைத் தவிர்ப்பதே இந்த மாடலின் முக்கிய நோக்கமாகும். நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட திட்ட அறிக்கைகள் (DPR) மூலம் பணிகள் தற்போது தடையின்றி நடைபெறுகின்றன. ஆந்திரா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்கள் இந்த அரசியல் சார்பற்ற தளத்தைப் பயன்படுத்திப் பலன் பெற்று வருகின்றன. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யும் திட்டம் இல்லை என்றும், அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்றுத் திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படும் என்றும் அரசு உறுதிப்படத் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *