மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம்
March 9, 2026

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டுக்குப்பிறகு, வரும் ஆவணி 31 (செப்டம்பர் 17) அன்று காலை 7.45 மணி முதல் 8.10 மணிக்குள் இந்த புனித வைபவம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் மற்றும் ராஜகோபுரங்கள் உள்ளிட்ட 186 திருப்பணிகள் சுமார் 35.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சித்திரைத் திருவிழா போன்ற முக்கிய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டும், ஆகம வல்லுநர்களின் ஆலோசனையின் பேரிலும் செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.