மணிப்பூர் வன்முறை வழக்கில் சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் கடும் உத்தரவு மற்றும் நிலை அறிக்கை கோரல்
February 13, 2026

மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பான விசாரணையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நிலை அறிக்கையை சமர்ப்பிக்க சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்களை வழங்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு அமைக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மறுபுறம், மணிப்பூரில் தற்போது அமைதி நிலவுவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிட்டார். இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் பிருந்தா குரோவர் சிபிஐயின் செயல்பாடுகளில் அலட்சியம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2023 மே மாதம் முதல் நடைபெற்று வரும் இந்த வன்முறையில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.