மகா கும்பமேளாவில் வைரலான ஹர்ஷா ரிச்சாரியா தனது வருங்கால கணவர் பற்றி அதிரடி தகவல்

மகா கும்பமேளா 2025 மூலம் சமூக வலைதளங்களில் வைரலான சனாதன தர்ம பிரச்சாரகர் ஹர்ஷா ரிச்சாரியா, தனது திருமணம் குறித்த ரகசியத்தை உடைத்துள்ளார். உத்தரபிரதேசத்தின் கௌசாம்பிக்கு ‘சக்தி சிருஜன் யாத்திரை’யாக வந்த அவர், தனது வருங்கால கணவர் ஒரு நடிகராகவோ அல்லது மாடலாகவோ இருக்க மாட்டார் என்று தெளிவாகக் கூறினார். மாறாக, மனிதாபிமானம் மிக்கவராகவும், சமுதாயம் மற்றும் தர்மத்திற்காக உழைப்பவராகவும் இருக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தற்போது 30 வயதாகும் ஹர்ஷா, தனது திருமணத்திற்கு குடும்பத்தினர் எந்த அழுத்தமும் தரவில்லை என்றும், அவர்களின் ஆதரவே தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். பிரயாக்ராஜில் தொடங்கிய இவரது யாத்திரை, இளைஞர்களிடையே மத நல்லிணக்கம் மற்றும் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, பிற மதத் திருமணங்களைத் தவிர்த்து, சொந்த கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தனது பிரச்சாரத்தை அவர் முன்னெடுத்து வருகிறார்.