பெயருக்கு இடமில்லை, ஆட்டத்திற்கு மட்டுமே! கில் நீக்கம்; உலகக்கோப்பை அணியில் கம்பீரின் அதிரடி
December 20, 2025

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. மோசமான ஃபார்மில் இருந்த சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ரின்கு சிங் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார், மேலும் இஷான் கிஷன் ‘வைல்ட் கார்டு’ என்ட்ரி மூலம் சேர்க்கப்பட்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணிக்கு அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவினர் பெயர்களை விட திறமைக்கே முக்கியத்துவம் அளித்துள்ளனர். தென்னாப்பிரிக்க தொடரில் சொதப்பிய கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்குவர். உள்நாட்டு போட்டிகளில் அசத்திய இஷான் கிஷனின் வருகை அணிக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.