பூந்தமல்லி மெட்ரோ பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை தீவிரம்

பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கரையான்சாவடி மற்றும் குமணன்சாவடி பகுதிகளில் மெட்ரோ தூண்களின் இருபுறமும் வாகன மேம்பாலம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை தொடங்கியுள்ளது. இதற்காக அப்பகுதியிலுள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன.
காட்டுப்பாக்கம் முதல் கல்லறை பேருந்து நிறுத்தம் வரை அமையவுள்ள இந்த மேம்பாலத்திற்காக சுமார் 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பாலத்துடன் சேர்த்து சர்வீஸ் சாலைகள் மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.