பிள்ளைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துவிட்டு கிணற்றில் குதித்து தாய் எடுத்த விபரீத முடிவு
March 27, 2026

காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கத்தில் கடன் தொல்லை காரணமாக இளம்பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவரும் கடன் பிரச்சனையால் உயிரிழந்த நிலையில், அந்த பெண் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். உயிரிழப்பதற்கு முன் தனது பிள்ளைகளுக்குப் பிடித்த தின்பண்டங்களை அவர் வாங்கிக் கொடுத்துள்ளார்.
பின்னர் ஆள் நடமாட்டமற்ற விவசாயக் கிணற்றில் குழந்தைகளைத் தள்ளிவிட்டு அவரும் குதித்துள்ளார். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மூவரின் உடல்களையும் மீட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்குத் தூண்டியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.