பித்தப்பை கல்லை உருவாக்கும் இந்த 5 உணவுகளை உடனே தவிர்க்காவிட்டால் ஆபத்து நிச்சயம்
December 28, 2025

பித்தப்பை கல் என்பது இன்றைய காலத்தில் பலருக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது, இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே நிரந்தர தீர்வாகும். நாம் அன்றாடம் உட்கொள்ளும் தவறான உணவுப் பழக்கங்களே இதற்கு முக்கிய காரணமாகிறது. குறிப்பாக அதிக கொழுப்புள்ள இறைச்சி, ஜங்க் ஃபுட்ஸ் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள் பித்தப்பையில் கற்கள் உருவாவதை துரிதப்படுத்துகின்றன.
அதிக சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள் உடலில் இன்சுலின் அளவை பாதித்து பித்தப்பை ஆரோக்கியத்தை கெடுக்கின்றன. மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அறுவை சிகிச்சை வரை செல்லாமல் இருக்க இந்த ஐந்து வகை உணவுகளை கட்டுப்படுத்துவது அவசியமாகும்.