பாலில் கலக்கப்படும் யூரியா மற்றும் டிடர்ஜெண்ட், உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் ஆபத்தில்
செய்தி பிரிவு : நீங்கள் தினமும் வாங்கும் பால் பாக்கெட்டுகளில் ஊட்டச்சத்திற்கு பதிலாக விஷம் கலந்து வருகிறதா? குஜராத்தில் சமீபத்தில் பிடிபட்ட கும்பல் ஒன்று யூரியா, டிடர்ஜெண்ட் மற்றும் பாம் ஆயில் போன்ற அபாயகரமான பொருட்களைக் கொண்டு செயற்கை பால் தயாரித்து விற்பனை செய்து வந்தது அம்பலமாகியுள்ளது. இத்தகைய ரசாயனங்கள் கலந்த பால் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை கடுமையாக பாதிக்கும் என்பதால், இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க வீட்டிலேயே சில எளிய சோதனைகளைச் செய்யுங்கள். ஒரு சொட்டு பாலை சரிவான இடத்தில் ஊற்றும்போது அது வெள்ளை நிறத் தழும்பை ஏற்படுத்தாமல் வேகமாக ஓடினால் அதில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். அதேபோல் பாலை குலுக்கும்போது அதிக நுரை வந்தால் அதில் டிடர்ஜெண்ட் கலந்திருக்க வாய்ப்புள்ளது. இத்தகைய விழிப்புணர்வு மட்டுமே உங்கள் குழந்தைகளை இந்த வெள்ளை விஷத்திலிருந்து காப்பாற்ற உதவும்.