பழைய கார் வாங்க போறீங்களா? இந்த தப்பு செஞ்சா மொத்தப் பணமும் காலி!

சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால், புதிய காரின் விலை அதிகம் என்பதால் பலரும் தற்போது செகண்ட் ஹேண்ட் (Second Hand) கார்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். குறைந்த விலையில் கனவை நனவாக்க நினைக்கும் போது, தெரியாமல் செய்யும் சில தவறுகள் உங்களை பெரிய ஆபத்தில் தள்ளிவிடக்கூடும்.
ஒரு தவறான முடிவு உங்கள் உழைப்பின் வருமானத்தை வீணாக்குவதுடன், உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிவிடும். எனவே, காரை வாங்குவதற்கு முன் ஒரு அனுபவம் வாய்ந்த மெக்கானிக்கைக் கொண்டு ‘டெஸ்ட் டிரைவ்’ செய்து பார்ப்பது மிகவும் அவசியம்.
குறிப்பாக, காரின் ஆர்சி (RC) புக், உரிமையாளர் விவரங்கள், இன்சூரன்ஸ் காலம் மற்றும் சர்வீஸ் ஹிஸ்டரி ஆகியவற்றைத் தவறாமல் சரிபார்க்கவும். இன்ஜின் நிலை அல்லது டயர்கள் சரியாக இல்லையெனில், பின்நாட்களில் நீங்கள் பெரும் தொகையைச் செலவிட நேரிடும். எனவே, அவசரப்படாமல் நிதானமாகச் செயல்பட்டால், நீங்கள் வாங்கும் பழைய கார் சிறந்த லாபகரமான ஒப்பந்தமாக அமையும்.