பஞ்சாப் அதிரடி வேட்டை குற்றவாளிகள் மற்றும் கேங்க்ஸ்டர்கள் சிதறடிக்கப்பட்டனர்

பஞ்சாப் அதிரடி வேட்டை குற்றவாளிகள் மற்றும் கேங்க்ஸ்டர்கள் சிதறடிக்கப்பட்டனர்

பஞ்சாப் மாநிலத்தை குற்றவாளிகள் அற்ற மாநிலமாக மாற்றும் நோக்கில் முதல்வர் பகவந்த் சிங் மான் உத்தரவின்படி ‘ஆபரேஷன் பிரஹார்-2’ தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 8,278 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 12,000 பணியாளர்களைக் கொண்ட 2,000 போலீஸ் குழுக்கள் இந்த வேட்டையில் ஈடுபட்டதாக டிஜிபி கௌரவ் யாதவ் தெரிவித்துள்ளார். கேங்க்ஸ்டர்கள் முழுமையாக ஒழிக்கப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என அவர் உறுதிபடக் கூறினார்.

இந்த மெகா சோதனையில் இதுவரை 3,260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் 135 தேடப்படும் குற்றவாளிகளும் அடங்குவர். சோதனையின் போது ஏராளமான ஆயுதங்கள், போதைப்பொருள் மற்றும் 30 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் குற்றவாளிகள் குறித்து புகார் அளிக்க தனி உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போரில் ஒரே நாளில் 164 கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்து சாதனை படைத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *