நேபாளத்தின் அடுத்த பிரதமர் பலன் ஷாவா? பொதுத்தேர்தலில் அதிரடி கூட்டணி அமைத்த ஆர்எஸ்பி

நேபாளத்தின் அடுத்த பிரதமர் பலன் ஷாவா? பொதுத்தேர்தலில் அதிரடி கூட்டணி அமைத்த ஆர்எஸ்பி

நேபாளத்தில் மார்ச் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னதாக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. காத்மாண்டு மேயர் பலேந்திர ஷா (பலன் ஷா), ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சியுடன் (RSP) கூட்டணி அமைத்து, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் நடந்த இளைஞர் போராட்டத்தின் எதிரொலியாக உருவான இந்த கூட்டணி, ஊழலற்ற நிர்வாகத்தை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்கிறது. ரபி லாமிச்சானே தலைமையிலான ஆர்எஸ்பி கட்சியின் ‘மணி’ (Bell) சின்னத்திலேயே பலன் ஷா போட்டியிடவுள்ளார்.

மற்றொரு முக்கிய மாற்றமாக, மாதேசி அரசியலில் செல்வாக்கு மிக்க மஹந்த தாக்கூர் தலைமையிலான ஜேஎஸ்பி மற்றும் உபேந்திர யாதவ் தலைமையிலான எல்எஸ்பி ஆகிய கட்சிகள் தங்களது இணைப்பை முறைப்படி அறிவித்துள்ளன. தேசிய அரசியலில் மாதேசி மக்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தவும், கூட்டாட்சி முறையை நிலைநாட்டவும் இந்த இரு கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. இளைஞர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ள பலன் ஷாவின் வருகை, நேபாள அரசியலில் பாரம்பரிய கட்சிகளுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *