நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் பகலிலும் இருளில் மூழ்கப்போகும் பூமி

நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் பகலிலும் இருளில் மூழ்கப்போகும் பூமி

வருகின்ற 2027 ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஒரு அரிய வானியல் நிகழ்வு அரங்கேற உள்ளது. இந்த நூற்றாண்டின் இரண்டாவது மிக நீண்ட முழு சூரிய கிரகணத்தின் போது, சுமார் 6 நிமிடங்கள் 22 வினாடிகளுக்கு சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்கும். 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்படும் மிக நீண்ட கிரகணம் இதுவாகும். மீண்டும் இத்தகைய நிகழ்வை 2114 ஆம் ஆண்டு வரை காண முடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயின், எகிப்து, சவுதி அரேபியா உள்ளிட்ட 11 நாடுகளில் இந்த கிரகணம் முழுமையாகத் தெரியும். இந்தியாவில் முழுமையாகத் தெரியாவிட்டாலும், நாட்டின் பல பகுதிகளில் பகுதி அளவு கிரகணத்தைக் காணலாம். 2026 ஆம் ஆண்டு கிரகணத்திற்குப் பிறகு, வானியல் ஆர்வலர்கள் மத்தியில் இந்த 2027 நிகழ்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *