திருமணமான இரண்டே மாதத்தில் உயிரிழந்த கடற்படை வீரர் கண்ணீர் மல்க பிரியாவிடை
December 29, 2025

ஆக்ராவின் மல்புரா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான இந்திய கடற்படை வீரர் அபிஷேக் குமார், மும்பையில் பணியில் இருந்தபோது எதிர்பாராத விதமாக காலமானார். கடந்த 2020-ஆம் ஆண்டு கடற்படையில் சேர்ந்த இவர், மும்பை கொலாபாவில் பணியாற்றி வந்தார். சனிக்கிழமை மாலை அவரது உடல் தேசியக் கொடி போர்த்தப்பட்டு சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டபோது, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து வீரவணக்கம் செலுத்தினர்.
கடந்த நவம்பர் 1-ஆம் தேதிதான் அபிஷேக் குமாருக்கும் ரேணுவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணமான இரண்டே மாதங்களில் நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது. கைகளில் இட்ட மருதாணி கூட அழியாத நிலையில் கணவரை இழந்த மனைவி ரேணு கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. சனிக்கிழமை மாலை முழு இராணுவ மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.