ட்ரம்ப்பின் விசா கொள்கை எதிர்த்து 20 மாகாணங்கள் அணி திரண்டு வழக்கு
December 13, 2025

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் எச்-1பி விசா கட்டண உயர்வுக்கு எதிராக, அமெரிக்காவின் 20 மாகாணங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளன. இந்த கொள்கை நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் ஊழியர் பற்றாக்குறையை உருவாக்குவதாகக் கூறி, முக்கியமாக ஜனநாயகக் கட்சியினர் ஆட்சி செய்யும் மாகாணங்கள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளன. விசா கொள்கை காரணமாக ட்ரம்ப் உள்நாட்டிலேயே கேள்விக்குள்ளாகியுள்ளார்.
தற்போதைய ட்ரம்ப் நிர்வாகத்திற்கு இது ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது. விசா கட்டணத்தை உயர்த்தியதால், நாட்டின் முக்கியமான சேவைகளில் ஆட்களை நியமிப்பது பாதிக்கப்படுவதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்தப் பிரச்சனைக்கு விரைவான தீர்வுகாண மாகாணங்களின் இந்த சட்டப் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.