டெல்லியில் நிதி நெருக்கடி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் 2 மகன்கள் தற்கொலை; அதிர்ச்சி சம்பவம்

டெல்லியில் நிதி நெருக்கடி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் 2 மகன்கள் தற்கொலை; அதிர்ச்சி சம்பவம்

தென்கிழக்கு டெல்லியின் கல்காஜியில், கடும் நிதி நெருக்கடி காரணமாக ஒரு தாய் மற்றும் அவரது இரண்டு மகன்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் அனுராதா கபூர் (52), ஆஷிஷ் கபூர் (32) மற்றும் சைதன்யா கபூர் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடினமான நிதி நிலைமைகள் மற்றும் வாடகை தொடர்பான சிக்கல்களால் அவர்கள் மன அழுத்தத்தில் இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து ஒரு தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டுள்ளது. சடலங்கள் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *