டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் அதிரடி மாற்றம் ஷமிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா

2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முக்கிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஜனவரி 7-ஆம் தேதிக்குள் அணிகளில் மாற்றம் செய்ய ஐசிசி அனுமதி அளித்துள்ள நிலையில், ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை சேர்க்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. அணியில் ஏற்கனவே ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே போன்ற ஆல்ரவுண்டர்கள் இருப்பதால், கூடுதல் பலம் சேர்க்க இந்த முடிவு எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
சையத் முஷ்டாக் அலி தொடரில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய முகமது ஷமி, இந்த இடத்தைப் பிடிக்க பலத்த போட்டியில் உள்ளார். வழக்கமாக பிசிசிஐ அறிவிக்கப்பட்ட அணியில் பெரிய மாற்றங்களைச் செய்யாது என்றாலும், ஷமியின் தற்போதைய ஃபார்ம் தேர்வுக்குழுவை யோசிக்க வைத்துள்ளது. அதேநேரம், ரிங்கு சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் ஆடும் லெவனில் இடம் பிடிப்பதில் கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.