ஜனவரி முதல் டாக்கா மற்றும் கராச்சி இடையே நேரடி விமான சேவை தொடங்க வாய்ப்பு

ஜனவரி முதல் டாக்கா மற்றும் கராச்சி இடையே நேரடி விமான சேவை தொடங்க வாய்ப்பு

வங்கதேச இடைக்கால அரசின் முதன்மை ஆலோசகர் முகமது யூனுஸை பாகிஸ்தான் தூதர் இம்ரான் ஹைதர் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வர்த்தகம், முதலீடு மற்றும் விமான போக்குவரத்து துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, வரும் ஜனவரி மாதம் முதல் டாக்கா மற்றும் கராச்சி நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து வெளியான அதிகாரப்பூர்வ தகவலின்படி, மருத்துவம், கல்வி மற்றும் கலாச்சார ரீதியான உறவுகளும் வலுப்படுத்தப்படும். குறிப்பாக வங்கதேச மாணவர்கள் பாகிஸ்தானில் மருத்துவம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் உயர்கல்வி கற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நேரடி விமான போக்குவரத்து இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *