சைபர் குற்றவாளிகள் தற்போது போலி குறுஞ்செய்திகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான லிங்க்குகள் மூலம் ஸ்மார்ட்போன் பயனர்களை குறிவைத்து வருகின்றனர். இதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வங்கி கணக்கில் உள்ள பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. உங்களின் சிறிய கவனக்குறைவு வாழ்நாள் சேமிப்பையே இழக்க நேரிடும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
December 20, 2025

தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மொபைல் மென்பொருளை உடனுக்குடன் அப்டேட் செய்வதும், வங்கி கணக்குகளுக்கு டூ-பேக்டர் ஆதென்டிகேஷன் முறையை பயன்படுத்துவதும் பணத்தை பாதுகாப்பாக வைக்க உதவும் சிறந்த வழியாகும்.