சீனாவை அதிர வைக்கும் தைவானின் புதிய ஏவுகணை படை பலம்

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, தைவானுக்கு சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட ஆயுத ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் உக்ரைன் போரில் ரஷ்யாவையே நிலைகுலையச் செய்த ‘ஹிமார்ஸ்’ ரெட் லாஞ்சர்கள், ஜாவெலின் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் கண்காணிப்பு ட்ரோன்கள் இடம்பெற்றுள்ளன. சீனாவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தைவான் தற்போது ‘போர்குபைன்’ எனப்படும் முள்ளம்பன்றி பாதுகாப்பு உத்தியைக் கையாண்டு, தன்னை மிகவும் வலிமையான நாடாக மாற்றிக்கொண்டு வருகிறது.
இந்த ஒப்பந்தம் பெய்ஜிங்கிற்கு நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது, ஏனெனில் தைவான் உலகின் 90 சதவீத மேம்பட்ட செமிகண்டக்டர் சிப்களை உற்பத்தி செய்யும் மையமாக உள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியைத் தடுக்க சிறிய ஆனால் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களை நிலைநிறுத்துவதே தைவானின் முக்கிய நோக்கமாகும். அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை ஆசிய பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாகவும் கருதப்படுகிறது.