சீனப் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு கடந்த 18 ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட லாபம் கிடைக்கவில்லை

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சீனா இருந்தபோதிலும், கடந்த 18 ஆண்டுகளில் அந்நாட்டுப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பூஜ்ஜிய சதவீத லாபத்தையே அளித்துள்ளது. ஷாங்காய் மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகளின் இந்த தேக்கநிலை பொருளாதார வல்லுநர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதே காலகட்டத்தில் இந்தியாவின் நிஃப்டி-50 குறியீடு 500 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், சீனாவின் அரசு நிறுவனங்களின் லாபமற்ற செயல்பாடுகளே இந்த வீழ்ச்சிக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
சீனாவின் ஜிடிபி உயர்ந்தாலும் பங்குச்சந்தையின் இந்த மந்தநிலை அந்நாட்டு பொருளாதாரத்தின் உண்மையான வலிமை குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அமெரிக்காவின் எஸ் அண்ட் பி-500 குறியீடு 250 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், பெய்ஜிங் சந்தையின் இந்த மோசமான நிலை முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. புள்ளிவிவரங்களில் முறைகேடுகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக சீனாவில் நீண்டகால முதலீடு செய்வது தற்போது பெரும் நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளது.