சிலிண்டர் முன்பதிவு செய்த 2.5 நாட்களில் இனி கேஸ் விநியோகம் செய்யப்படும்
March 12, 2026

ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடல் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த இக்கட்டான நிலையைச் சமாளிக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தற்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களின் உற்பத்தியை 10 சதவீதம் அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது. சிலிண்டர் முன்பதிவு செய்த இரண்டரை நாட்களுக்குள் விநியோகம் செய்யப்படும் என்று இணைச் செயலாளர் சுஜாதா சர்மா உறுதி அளித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும், மாற்று வழிகள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு நிலைமை விரைவில் சீராகும் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.