சிறையில் பார்வை இழக்கும் இம்ரான் கான் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் தனது வலது கண்ணின் 85 சதவீத பார்வையை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உச்ச நீதிமன்ற அதிகாரியின் அறிக்கையின்படி, அக்டோபர் வரை சீராக இருந்த அவரது பார்வைத் திறன் தற்போது 15 சதவீதமாகக் குறைந்துள்ளது. அவரது கண்ணில் ரத்தம் உறைந்திருப்பதை கண் மருத்துவ நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இது பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிடி தலைமையிலான அமர்வு, பிப்ரவரி 16-க்குள் இம்ரானுக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது. கைதிகளுக்கு முறையான சிகிச்சை அளிப்பது அரசின் கடமை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களின் மேற்பார்வையில் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அல்லது தேவையான சிகிச்சைகளை வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், இம்ரான் தனது மகன்களுடன் தொலைபேசியில் பேசவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.