சவுத் பிளாக் இனி வரலாறு! ‘சேவா தீர்த்தம்’ புதிய அலுவலகத்தில் குடியேறினார் பிரதமர் மோடி
February 13, 2026

சுமார் 79 ஆண்டுகால வரலாற்றுப் பயணத்திற்குப் பிறகு, பிரதமர் அலுவலகம் (PMO) டெல்லியின் சவுத் பிளாக்கிலிருந்து சென்ட்ரல் விஸ்டாவில் உள்ள புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ‘சேவா தீர்த்தம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நவீன வளாகத்தின் மூன்று கட்டிடங்களில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி இனி தனது பணிகளை மேற்கொள்வார். பிரிட்டிஷ் கால மரபுகளைக் கடந்து, பொதுச் சேவைக்கான அர்ப்பணிப்பாக இந்த மாற்றம் பார்க்கப்படுகிறது.
இந்த புதிய வளாகத்தில் பிரதமர் அலுவலகத்துடன் அமைச்சரவை செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகமும் இயங்கும். மேலும், பல முக்கிய மத்திய அமைச்சகங்களும் கர்த்தவ்ய பவனுக்கு மாற்றப்பட்டுள்ளன. நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், நவீன காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.