சல்மான் கான் படத்தால் அலறும் சீனா பின்னணி என்ன

சல்மான் கான் படத்தால் அலறும் சீனா பின்னணி என்ன

சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘பேட்டில் ஆஃப் கல்வான்’ படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து சீன ஊடகங்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்திய-சீன ராணுவ மோதலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சல்மான் கான் கர்னல் சந்தோஷ் பாபு வேடத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் உண்மைகளை மறைப்பதாகக் கூறும் சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், கற்பனையான கதைகளால் வரலாற்றை மாற்ற முடியாது என்று விமர்சித்துள்ளது.

சீன சமூக வலைதளங்களில் இந்தப் படம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. எல்லையில் அத்துமீறல்கள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே முரண்பட்ட கருத்துக்கள் உள்ள நிலையில், இந்தப் படம் தேசபக்தியைத் தூண்டும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக சீனா குற்றம் சாட்டுகிறது. ஆஸ்திரேலிய ஊடகங்களின் தகவல்படி கல்வான் மோதலில் சீன வீரர்கள் பலர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும், அதைத் தொடர்ந்து சீனா மறுத்தே வருகிறது. தற்போது இந்தப் படம் இரு நாடுகளுக்கும் இடையிலான சுமுக உறவைப் பாதிக்கலாம் என்று சீன நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *