சமூக ஊடக பதிவால் சிக்கிய சட்டவிரோத வங்கதேச தம்பதி உத்தர பிரதேசத்தில் கைது

சமூக ஊடக பதிவால் சிக்கிய சட்டவிரோத வங்கதேச தம்பதி உத்தர பிரதேசத்தில் கைது

உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச தம்பதி ரினா பேகம் மற்றும் ரஷித் அலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சவுதி அரேபியாவில் காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி, இந்த ஆண்டு மார்ச் மாதம் வங்கதேசம் திரும்பினர். பின்னர், அக்டோபர் 9 ஆம் தேதி நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து அம்ரோஹா மாவட்டத்தின் மாண்டி தநௌரா பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

‘பை பை பங்களாதேஷ்’ என்ற தலைப்பில் ரினா பேகம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு பதிவை போலீசார் கவனித்தனர். ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த தம்பதி முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்தது உறுதியானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சட்டவிரோதமாக நுழைய உதவியவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *