சஞ்சு-டேவிட் அதிரடி! பெங்கால் சூப்பர் லீக்கில் நார்த் பெங்கால் யுனைடெட் அபார வெற்றி

சஞ்சு-டேவிட் அதிரடி! பெங்கால் சூப்பர் லீக்கில் நார்த் பெங்கால் யுனைடெட் அபார வெற்றி

பெங்கால் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பர்த்வான் பிளாஸ்டர்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நார்த் பெங்கால் யுனைடெட் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. போல்பூர் மைதானத்தில் நடந்த ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் சஞ்சு சாந்த்ரா முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 61-வது நிமிடத்தில் டேவிட் இரண்டாவது கோலை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். பர்த்வான் அணியால் கடைசி வரை கோல் ஏதும் திருப்ப முடியவில்லை.

இந்த வெற்றியின் மூலம் நார்த் பெங்கால் அணி 2 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாந்த்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். தற்போது ஹவுரா-ஹூக்லி வாரியர்ஸ் அணி கோல் வித்தியாச அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *