சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகமடைந்த கேரள தொழிலதிபர் ஊழியர்களுக்கு ரூ 1.64 லட்சம் பரிசு வழங்கினார்
March 10, 2026

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் 46 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அசத்திய தொடக்க வீரர் சஞ்சு சாம்சனின் ஆட்டத்தை கொண்டாடும் வகையில், கோட்டயத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நித்தின் பாபு தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
தன்னுடைய துணிக்கடைகளில் பணிபுரியும் 82 ஊழியர்களுக்கும் தலா ரூ 2,000 வீதம் மொத்தம் 1.64 லட்சம் ரூபாயை அவர் பரிசாக வழங்கியுள்ளார். ஏற்கனவே சூப்பர் 8 மற்றும் அரை இறுதிப் போட்டிகளிலும் சஞ்சுவின் அதிரடியை முன்னிட்டு அவர் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது.