சச்சின் கொடுத்த ரகசிய மந்திரம் சஞ்சு சாம்சனின் அதிரடி வெற்றிக்கு காரணமா
March 9, 2026

நீண்ட நாட்களாக பார்ம் அவுட்டில் இருந்த சஞ்சு சாம்சன் தற்போது உலகக்கோப்பையில் இந்திய அணியின் வெற்றி நாயகனாக உருவெடுத்துள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 97 ரன்கள் எடுத்ததுடன் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அரைசதங்கள் விளாசி அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
தனது இந்த மாபெரும் வெற்றிக்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அளித்த ஆலோசனைகளே காரணம் என சஞ்சு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இக்கட்டான சூழலில் சச்சின் கொடுத்த ஊக்கமும் வழிகாட்டுதலுமே தனது தன்னம்பிக்கையை மீட்டெடுத்து அழுத்தமான நேரத்திலும் சிறப்பாக விளையாட உதவியதாக அவர் கூறியுள்ளார்.