கோவிட் தடுப்பூசி அல்ல! இளைஞர்களின் திடீர் மரணத்திற்கான உண்மையான காரணத்தை வெளியிட்ட AIIMS

கோவிட் தடுப்பூசி அல்ல! இளைஞர்களின் திடீர் மரணத்திற்கான உண்மையான காரணத்தை வெளியிட்ட AIIMS

கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு இளைஞர்கள் மத்தியில் திடீர் மரணங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு கோவிட் தடுப்பூசியே முக்கிய காரணம் என்று சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) நிராகரித்துள்ளது. AIIMS-ன் விரிவான ஆய்வில், இந்த திடீர் மரணங்களுக்குத் தடுப்பூசிதான் காரணம் என்பதற்கு உறுதியான அறிவியல் ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

AIIMS-ன் நோயியல் நிபுணர் டாக்டர் சுதீர் அரவா, இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கு கரோனரி தமனி நோய் அல்லது மாரடைப்பு முக்கிய காரணம் என்று தெரிவித்தார். மோசமான வாழ்க்கை முறை, அதிக மன அழுத்தம், போதிய உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களே இந்தக் கோளாறுகளின் அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கின்றன. வதந்திகளை நம்பாமல், சரிவிகித உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் கவனம் செலுத்துவதே அவசியம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *