குறைந்த செலவில் ஐரோப்பிய பயணம் தரும் தமிழ்நாட்டின் தரங்கம்பாடி

குறைந்த செலவில் ஐரோப்பிய பயணம் தரும் தமிழ்நாட்டின் தரங்கம்பாடி

மயிலாடுதுறை மாவட்டத்தில் வங்காள விரிகுடா அலைகள் தழுவும் தரங்கம்பாடி, ‘இந்தியாவின் டென்மார்க்’ என்று அழைக்கப்படும் வரலாற்று பொக்கிஷமாகும். 17-ஆம் நூற்றாண்டில் டேனிஷ் கோட்டையாக விளங்கிய இங்குள்ள டான்ஸ்போர்க் கோட்டை, ஐரோப்பிய கட்டிடக்கலையின் கம்பீரத்தை இன்றும் பறைசாற்றுகிறது. திட்டமிடப்பட்ட தெருக்களும், தூய்மையான காற்றும் நிறைந்த இப்பகுதி ஒரு சிறந்த ‘ஓசோன் பெல்ட்’ ஆகக் கருதப்படுகிறது.

வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் அமைதியை விரும்புவோருக்கு ஏற்ற இந்த ஊரில், 4 முதல் 5 நாட்கள் தங்கிச் சுற்றிப் பார்க்க நபர் ஒருவருக்கு சுமார் 8,000 முதல் 10,000 ரூபாய் மட்டுமே செலவாகும். பழங்கால அருங்காட்சியகம் மற்றும் நடனமாடும் அலைகளின் அழகு, குறைந்த செலவில் ஒரு சர்வதேச சுற்றுலா அனுபவத்தை பயணிகளுக்கு வழங்குகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *