குஜராத் முதியவர்களிடம் 31 கோடி ரூபாய் டிஜிட்டல் மோசடி வழக்கை கையில் எடுத்தது சிபிஐ
March 14, 2026

குஜராத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பெண் மருத்துவர் மற்றும் பேராசிரியை ஆகியோரிடம் ‘டிஜிட்டல் கைது’ மிரட்டல் விடுத்து 31 கோடி ரூபாய் பறிக்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. தொலைத்தொடர்பு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் போல நடித்து, சட்டவிரோத பணப் பரிமாற்றப் புகாரைக் கூறி முதியவர்களை மிரட்டி இந்தப் பெருந்தொகை சுருட்டப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு தற்போது புதிய எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. வீடியோ கால் மூலம் நான்கு மாதங்கள் வரை கண்காணிப்பில் வைத்து மிரட்டிய சர்வதேச பின்னணி கொண்ட இந்த மோசடி கும்பலை பிடிக்க அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.