கீசர் இல்லாமலேயே சுடுதண்ணீர்! மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க இதோ சில எளிய வழிகள்

கீசர் இல்லாமலேயே சுடுதண்ணீர்! மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க இதோ சில எளிய வழிகள்

குளிர்காலத்தில் வாட்டர் கீசர் இல்லாமலேயே தொட்டியில் உள்ள தண்ணீரை சூடாக வைத்திருக்க முடியும். தண்ணீர் தொட்டிக்கு கருப்பு வண்ணம் பூசுவதன் மூலம் அது சூரிய வெப்பத்தை விரைவாக ஈர்த்து தண்ணீரை சூடாக்கும். மேலும், நாள் முழுவதும் வெயில் படும் இடத்தில் தொட்டியை அமைப்பது இயற்கையாகவே தண்ணீரின் வெப்பநிலையை அதிகரிக்க உதவும் சிறந்த வழியாகும்.

தொட்டியைச் சுற்றி தெர்மாகோல், ஃபோம் ஷீட் அல்லது பழைய கம்பளிகளைப் போர்த்தி இன்சுலேஷன் செய்வதன் மூலம் வெப்பம் வெளியேறாமல் தடுக்கலாம். இந்த எளிய முறைகள் மின்சாரக் கட்டணத்தைச் சேமிப்பதுடன், குளிர்கால காலையிலும் உங்களுக்கு இதமான சுடுதண்ணீரை வழங்கும். செலவில்லாத இந்த நுட்பங்களை உடனே முயற்சி செய்து பாருங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *