கிராமப்புற வேலைவாய்ப்பில் அதிரடி மாற்றம் 125 நாட்கள் வேலை உறுதி

கிராமப்புற வேலைவாய்ப்பில் அதிரடி மாற்றம் 125 நாட்கள் வேலை உறுதி

மத்திய அரசு கொண்டு வந்த ‘விக்சித் பாரத் உத்தரவாத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கம் 2025’ மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 20 ஆண்டுகால மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு மாற்றாக அமையும் இப்புதிய சட்டத்தின் கீழ், இனி ஆண்டுக்கு 100 நாட்களுக்கு பதில் 125 நாட்கள் வேலை வழங்கப்படவுள்ளது. விவசாய காலங்களில் தொழிலாளர் பற்றாக்குறையை தவிர்க்க இதில் சிறப்பு விடுமுறை வசதியும் உள்ளது.

இந்த புதிய திட்டத்திற்காக சுமார் 1.51 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்வளம் மற்றும் சாலை மேம்பாடு போன்ற நிலையான கட்டமைப்புகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். ஊழலைத் தடுக்க பயோமெட்ரிக் வருகை மற்றும் ஜிபிஎஸ் கண்காணிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கான ஊதியம் 15 நாட்களுக்குள் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *