கிங் சார்லஸின் கௌரவப் பட்டியலில் இடம்பிடித்த இந்திய வம்சாவளி சாதனையாளர்கள்

கிங் சார்லஸின் கௌரவப் பட்டியலில் இடம்பிடித்த இந்திய வம்சாவளி சாதனையாளர்கள்

2026 புத்தாண்டையொட்டி பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் III வெளியிட்டுள்ள கௌரவப் பட்டியலில் பல இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர். இதில் புகழ்பெற்ற நடிகையும் எழுத்தாளருமான மீரா சியால் மற்றும் மருத்துவ மரபியல் துறையில் சிறந்த பணியாற்றிய பேராசிரியர் மீனா உபாத்யாய் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும், ஆடை வடிவமைப்பாளர் மணி கோலி உள்ளிட்ட பல இந்தியர்கள் தங்களது துறைகளில் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக இந்த உயரிய விருதைப் பெறுகின்றனர்.

மொத்தம் 1,157 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் சமூக சேவகர் பவன் போபட், துருவ் படேல் மற்றும் நீதா அத்கர் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இசை மற்றும் நடனக் கலைகளுக்காக ஹர்ஜிந்தர் சிங் மற்றும் பலபீர் சிங் ஆகியோர் கௌரவிக்கப்பட உள்ளனர். இந்தப் பட்டியலில் 14 சதவீதம் பேர் சிறுபான்மையினர் என்பதுடன், பிரிட்டனின் முன்னேற்றத்தில் இந்திய வம்சாவளியினரின் முக்கியத்துவத்தை இந்த கௌரவம் பறைசாற்றுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *