கிங்ஃபிஷர் ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் பத்தாண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் பெரும் தொகை

கிங்ஃபிஷர் ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் பத்தாண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் பெரும் தொகை

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு ஒரு தசாப்த கால காத்திருப்புக்குப் பிறகு மிகப்பெரிய நிம்மதி கிடைத்துள்ளது. அமலாக்கத்துறையின் (ED) முயற்சியால் சுமார் 311.67 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்ட பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் இந்தத் தொகை திரட்டப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 12 அன்று, சென்னையில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயம் இந்த நிதியை அதிகாரப்பூர்வ லிக்விடேட்டரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.

விஜய் மல்லையா மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை சுமார் 5,042 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஏற்கனவே முடக்கியிருந்தது. எஸ்பிஐ தலைமையிலான வங்கிக் கூட்டமைப்பு ஊழியர்களின் நிலுவைத் தொகையை வழங்க நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. முன்னதாக வங்கிகளுக்கு 14,132 கோடி ரூபாயை மீட்டெடுத்து வழங்கிய அமலாக்கத்துறை, தற்போது ஊழியர்களின் நலனுக்காக இந்த 311 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *