கான்பூரில் அதிவேக லம்போர்கினி கார் கோர விபத்து சிக்கியவர்கள் உயிர் தப்புவார்களா

கான்பூரில் அதிவேக லம்போர்கினி கார் கோர விபத்து சிக்கியவர்கள் உயிர் தப்புவார்களா

கான்பூரின் ரேவ்-3 மால் பகுதியில் அதிவேகமாக வந்த லம்போர்கினி கார் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மற்றும் பைக் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. புகையிலை தொழிலதிபர் கே.கே.மிஸ்ராவின் மகன் சிவம் மிஸ்ரா ஓட்டிய இந்த கார், மோதிய வேகத்தில் இருசக்கர வாகன ஓட்டி தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் மொத்தம் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வாகனம் ஓட்டும்போது ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. விபத்துக்குப் பிறகு உள்ளூர் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சொகுசு காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநரின் உடல்நிலை மற்றும் விபத்திற்கான சரியான காரணம் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *