கள்ளக்காதல் சந்தேகம், மனைவியின் மொட்டையடித்த கணவனின் கொடூர செயல்

கள்ளக்காதல் சந்தேகம், மனைவியின் மொட்டையடித்த கணவனின் கொடூர செயல்

செய்தி பிரிவு : கதவைத் திறக்கச் சற்று தாமதமானால் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? கர்நாடகாவின் பாகல்கோட்டில் கணவன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு செய்த காரியம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உணவை டெலிவரி செய்ய வந்த ஒரு வாலிபருடன் தொடர்பு இருப்பதாகக் கருதி, வீட்டின் கதவைப் பூட்டி மனைவியைத் தாக்கி, எலக்ட்ரிக் ட்ரிம்மர் மூலம் அவரது தலையை மொட்டையடித்துள்ளார். இத்தகைய கொடூரங்கள் சமூகத்தில் மனிதநேயம் மறைந்து வருவதைக் காட்டுகின்றன.

இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப உறவுகளுக்குள் பெருகி வரும் இந்தச் சந்தேகப் பேய், ஒரு தனிமனிதனின் வாழ்க்கையை எப்படிச் சீரழிக்கும் என்பதற்கு இதுவே சாட்சி. குற்றம் சாட்டப்பட்ட உமேஷ் கொட்டலகி கைது செய்யப்பட்டாலும், இதுபோன்ற மனநிலை கொண்டவர்களால் சாதாரண மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. சமூகச் சிந்தனை மாறாதவரை இத்தகைய அவலங்கள் தொடர்வது கவலைக்குரியது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *