கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை, மைத்துனருக்கு பணம் கொடுத்து முடித்த மனைவி

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை, மைத்துனருக்கு பணம் கொடுத்து முடித்த மனைவி

டெல்லி அலிப்பூர் பகுதியில் கணவனைக் கொலை செய்த வழக்கில் அவரது மனைவி சோனியா மற்றும் கள்ளக்காதலன் ரோஹித் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 17 ஆண்டு திருமண வாழ்க்கையில் மூன்று குழந்தைகள் இருந்தும், சோனியா தனது மைத்துனரான விஜய்க்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து கணவன் பிரீதமை கொலை செய்யத் தூண்டியுள்ளார். கொலைக்குப் பிறகு ஆதாரமாக வீடியோவை இன்ஸ்டாகிராமில் அனுப்பிய விஜய்க்கு, கணவனின் ஆட்டோவை விற்று சோனியா மீதிப் பணத்தைக் கொடுத்துள்ளார்.

கணவன் காணவில்லை என நாடகமாடிய சோனியா, போலீஸ் விசாரணையில் சிக்கினார். கொலை செய்யப்பட்ட பிரீதமின் விலை உயர்ந்த செல்போனை அழிக்காமல் கொலையாளி விஜய் பயன்படுத்தியதே இந்த மர்மத்தை உடைக்க உதவியது. செல்போன் சிக்னலை வைத்து துப்பு துலக்கிய போலீசார், கள்ளக்காதல் விவகாரத்தையும் கொலைச் சதியையும் அம்பலப்படுத்தினர். தற்போது சோனியாவும் அவரது காதலனும் சிறையில் உள்ள நிலையில், தலைமறைவாக உள்ள விஜய்யை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *