கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தம் குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்குமா

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தம் குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்குமா

கர்ப்பிணிப் பெண்களின் மனநலம் அவர்களின் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்தோடு நேரடியாகத் தொடர்புடையது. லான்செட் மருத்துவ இதழின் சமீபத்திய ஆய்வின்படி, கர்ப்ப காலத்தில் ஒரு தாய் மன அழுத்தத்திற்கு ஆளானால், அது குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் எனத் தெரியவந்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஏடிஎச்டி (ADHD) மற்றும் ஆட்டிசம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகம். உடலில் அதிகரிக்கும் கார்டிசோல் எனும் அழுத்த ஹார்மோன், கருவில் இருக்கும் குழந்தையின் கற்கும் திறனையும் கவனத்தையும் சிதைக்கக்கூடும்.

குடும்பப் பிரச்சனைகள் மற்றும் தூக்கமின்மை போன்றவை கர்ப்ப கால மனச்சோர்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன. எப்போதும் கவலையாக இருப்பது அல்லது தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். சீரான உறக்கம், லேசான உடற்பயிற்சி மற்றும் செல்போன் பயன்பாட்டைக் குறைப்பது போன்ற வாழ்வியல் மாற்றங்கள் தாயையும் சேயையும் பாதுகாக்கும். ஆரோக்கியமான குழந்தை பிறக்க தாய்க்கு குடும்பத்தின் ஆதரவும் மகிழ்ச்சியான மனநிலையும் மிக முக்கியம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *