ஓலா-உபெருக்கு எண்ட் கார்டு? அமித் ஷா தொடங்கி வைத்த ‘பாரத் டாக்ஸி’ – பயணிகளுக்கு ஜாக்பாட்!
February 9, 2026

மத்திய அமைச்சர் அமித் ஷா இந்தியாவின் முதல் கூட்டுறவு அடிப்படையிலான ‘பாரத் டாக்ஸி’ செயலியை தொடங்கி வைத்தார். ஓலா மற்றும் உபெருக்கு மாற்றாக உருவெடுத்துள்ள இதில், ஓட்டுநர்களிடம் கமிஷன் வசூலிக்கப்படாது; மாறாக லாபத்தில் பங்கு வழங்கப்படும். டெல்லி மற்றும் குஜராத்தில் தொடங்கப்பட்ட இந்தச் சேவையில் ஏற்கனவே 3 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுநர்கள் இணைந்துள்ளனர்.
பயணிகளுக்கு இதில் ‘சர்ஜ் பிரைசிங்’ கிடையாது, எனவே அதிக தேவை உள்ள நேரத்திலும் கட்டணம் உயராது. அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் இச்சேவையை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஓட்டுநர்களுக்கு காப்பீடு மற்றும் ஓய்வூதிய வசதிகளுடன், பயணிகளின் பாதுகாப்பிற்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.