ஒரே வானத்தில் 4 நிலவுகள்! ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அதிசயக் காட்சி, ஆனால் அது உலக முடிவின் அறிகுறியா?

எக்ஜலோக் நியூஸ் டெஸ்க் : ஒரே வானத்தில் நான்கு நிலவுகள் தோன்றினால் எப்படி இருக்கும்? ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் தோன்றிய இந்த அரிய காட்சி மக்களை வியப்பிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. இது ஏதேனும் ஆபத்தான அறிகுறியா என்று மக்கள் பயந்த நிலையில், இதன் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மையை ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர். இது போன்ற விசித்திரமான இயற்கை நிகழ்வுகள் பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இது ஒரு ‘ஒளியியல் மாயை’ (Optical Illusion) ஆகும். வளிமண்டலத்தில் உள்ள பனிப் படிகங்கள் வழியாக நிலவொளி ஊடுருவிச் செல்லும்போது, சிதறடிக்கப்பட்டு இது போன்ற கூடுதல் பிம்பங்களை உருவாக்குகிறது. இதை அறிவியல் ரீதியாக ‘மூன் டாக்’ (Moon Dog) என்று அழைக்கிறார்கள். நாசாவின் விளக்கப்படி, பனிப் படிகங்கள் பெரியதாக இருக்கும்போது இந்த போலி நிலவுகள் அதிக பிரகாசமாகத் தெரியும். எனவே, இது ஒரு இயற்கை நிகழ்வே தவிர பயப்பட வேண்டிய அவசியமில்லை.